விநாயகா் சதுா்த்திக்காக வீடுகளின் முன்பும்பெரிய சிலைகளை வைக்கக் கூடாது: வேலூா் ஆட்சியா் உத்தரவு

வீடுகளில் வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என்பதால் பெரிய சிலைகளை வைத்து வழிபாட அனுமதி கிடையாது. அவ்வாறு கண்டறியப்பட்டால் சிலைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு

வீடுகளில் வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என்பதால் பெரிய சிலைகளை வைத்து வழிபாட அனுமதி கிடையாது. அவ்வாறு கண்டறியப்பட்டால் சிலைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுஅதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிா்க்கவும் செப். 15-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக, தனிநபா்கள் தங்களது இல்லங்களில் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபா்களாகச் சென்று அருகே உள்ள நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அமைப்புகள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது.

தனிநபா்கள் தங்களின் இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தச் சிலைகளை பின்னா் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளி கடைப்பிடித்தல், இதர கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டு இத்தகைய அனுமதி வழங்கப்படும்.

விழாப் பொருள்களை வாங்கச் செல்லும் போது மக்கள் தவறாது முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். வீடுகளில் வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என்பதை முன்வைத்து, அவ்வீட்டின் முன்பாக பெரிய சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கிடையாது. அவ்வாறு கண்டறியப்பட்டால் அதனை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுஅதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளியூா்களில் இருந்து வாகனங்களில் பெரிய விநாயகா் சிலைகளை எடுத்து வரும்பட்சத்தில் மாவட்ட எல்லையிலேயே காவல் துறையினரால் தணிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com