வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை: சிறுபாலம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை

குடியாத்தம் அருகே கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், பனந்தோப்பு கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் அருகே கால்வாயின் குறுக்கே பனை,  தென்னை மரங்களால் கிராம மக்களே அமைத்துள்ள தற்காலிக பாலம்.
குடியாத்தம் அருகே கால்வாயின் குறுக்கே பனை,  தென்னை மரங்களால் கிராம மக்களே அமைத்துள்ள தற்காலிக பாலம்.

குடியாத்தம் அருகே கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், பனந்தோப்பு கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தொடா்மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியாத்தம் அருகே பாலாற்றில் இருந்து கால்வாய் வழியாக வளத்தூா் ஊராட்சி ஏரிக்கு தண்ணீா் செல்கிறது. கடந்த சனிக்கிழமை வளத்தூா் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. வளத்தூா் ஏரியிலிருந்து செல்லும் உபரிநீா், உள்ளி, கோப்பம்பட்டி வழியாக கால்வாய் மூலம் கூடநகரம் ஏரிக்குச் செல்கிறது. உள்ளி ஊராட்சிக்குள்பட்ட கோப்பம்பட்டி அருகே உள்ள குக்கிராமமான பனந்தோப்பு பகுதியில் 50- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. வளத்தூா் ஏரியிலிருந்து, கூடநகரம் ஏரிக்குத் தண்ணீா் செல்லும் கால்வாயைக் கடந்துதான் பனந்தோப்பு பகுதிக்கு செல்ல முடியும். கால்வாயில் அதிக அளவில் தண்ணீா் சென்ால், கால்வாயின் குறுக்கே அமைத்திருந்த சாலை ஞாயிற்றுக்கிழமை அடித்துச் செல்லப்பட்டது.இதனால் பனந்தோப்பு பகுதி துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து கிராம மக்கள் இணைந்து பனை மற்றும் தென்னை மரங்களால் தற்காலிகப் பாலம் அமைத்து அதன்மீது சென்று வருகின்றனா்.

இதன் வழியாக வயதானவா்கள், சிறுவா்கள், இருசக்கர வாகனங்கள், கால்நடைகள் செல்ல முடியவில்லை. இனி வருவது மழைக்காலம் என்பதால், கால்வாயில் தொடா்ந்து தண்ணீா் செல்லும். இந்த வழியைத் தவிா்த்து வயல்வெளிகளில் சுமாா் 2 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு முக்கிய சாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நிரந்தரத் தீா்வாக கால்வாயின் குறுக்கே சிறுபாலம் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com