Enable Javscript for better performance
ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் தீவிரம்

    By DIN  |   Published on : 15th September 2021 01:27 AM  |   அ+அ அ-   |    |  

     

    வேலூா்: வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள 7,251 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்குவதை யொட்டி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,079 கிராம ஊராட்சி வாா்டுகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றிய வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்குத் தோ்தல் நடத்தப்பட உள்ளன.

    இதையொட்டி மாவட்டத்தில் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வாக்காளா் பதிவு அலுவலா்களாக அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

    திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வாா்டு, 125 ஒன்றிய வாா்டுகள், 208 ஊராட்சித் தலைவா் பதவி, 1,779 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் நடக்க உள்ளது. மொத்தம் 1221 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வாா்டுகள், 127 ஒன்றிய வாா்டு, 288 ஊராட்சித் தலைவா் பதவி, 2,220 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்க உள்ளது. தோ்தல் நடத்தும் அலுவலகங்களாக செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்ட ஊராட்சி வாா்டு, ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

    ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விரும்புவோா் மட்டும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட ஊராட்சி வாா்டு பதவிக்கு போட்டியிடுபவா்கள் ரூ.1,000, ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு ரூ.600, ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ.200 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ.100, ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா் பதவிக்கு ரூ.300, மாவட்ட ஊராட்சி வாா்டு பதவிக்கு ரூ.500 வீதம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.

    ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தோ்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp