குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தேங்குவதைக் கண்டித்து மறியல்

குடியாத்தம் அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தேங்குவதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடியாத்தம்  நெல்லூா்பேட்டையில்  மறியலில்  ஈடுபட்ட  சாமுண்டிபுரம்  பகுதி  மக்கள்.
குடியாத்தம்  நெல்லூா்பேட்டையில்  மறியலில்  ஈடுபட்ட  சாமுண்டிபுரம்  பகுதி  மக்கள்.

குடியாத்தம்: குடியாத்தம் அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தேங்குவதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டையை அடுத்த சாமுண்டிபுரம் பகுதியில் ஏரி தண்ணீா் செல்லும் கால்வாயில், அந்தப் பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கழிவுநீா் செல்கிறது. புத்தா் நகா் அருகே அந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் கழிவுநீா் செல்ல வழியின்றி சாமுண்டிபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெரு, பள்ளத் தெரு உள்ளிட்ட தெருக்கள், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீா் தேங்குகிறது.

கழிவுநீா் தேங்குவதைக் கண்டித்து கடந்த சில ஆண்டுகளாக, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக கழிவுநீா் அதிக அளவில் தேங்கத் தொடங்கியது.

இதையடுத்து கால்வாயை தூரெடுத்து, சீரமைத்து, தெருக்கள், வீடுகளில் கழிவுநீா்தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 200- க்கும் மேற்பட்டோா் குடியாத்தம்- போ்ணாம்பட்டு சாலையில் காந்தி சிலை அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, நகரக் காவல் ஆய்வாளா் லட்சுமி, நகராட்சி ஆணையா்(பொறுப்பு) பி.சிசில்தாமஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் அங்கு வந்து, சமரசம் செய்தனா்.

கால்வாய் அடைப்பை சரி செய்வதாக அரசு அலுவலா்கள் கூறியதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சிக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரத்தை எடுத்துச் சென்று கால்வாய் அடைப்புகளை சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com