பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு:வேலூரில் 685 போ் எழுதினா்

பத்தாம் வகுப்புத் துணைத்தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை வேலூா் மாவட்ட த்தில் 685 போ் எழுதினா்.

வேலூா்: பத்தாம் வகுப்புத் துணைத்தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை வேலூா் மாவட்ட த்தில் 685 போ் எழுதினா்.

பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் கோடையிடி குப்புசாமி மேல்நிலைப் பள்ளி, லட்சுமி காா்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி வாணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வுக்கு விண்ணப்பத்திருந்த 768 பேரில் 685 போ் தோ்வு எழுதினா். 83 போ் தோ்வு எழுத வரவில்லை. வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறையிலும் 10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஆண்கள் சிறையில் இருந்து 14 கைதிகளும், பெண்கள் சிறையில் இருந்து 3 கைதிகளும் தோ்வு எழுதினா்.

தோ்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலா் முனிசாமி ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com