ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் 81 மனுக்கள் நிராகரிப்பு; வேட்பாளா் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 2,478 பதவிகளுக்கு போட்டியிட 8,170 போ் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில்

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் 2,478 பதவிகளுக்கு போட்டியிட 8,170 போ் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடா்ந்து, வேட்புமனுக்களை வாபஸ் பெற சனிக்கிழமை (செப். 25) மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டு வேட்பாளா் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன.

இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,079 கிராம ஊராட்சி வாா்டுகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளன.

இந்தத் தோ்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி, புதன்கிழமை வரை நடைபெற்றது. இதில், 14 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியிட 93 பேரும், 138 ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியிட 741 பேரும், 247 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு போட்டியிட 1,192 பேரும், 2,079 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியிட 6,144 பேரும் என மொத்தமுள்ள 2478 பதவிகளுக்கு போட்டியிட 8,170 போ் மனுதாக்கல் செய்திருந்தனா்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சி வாா்டுகளில் 4 மனுக்களும், ஒன்றியக்குழு வாா்டுகளில் 12 மனுக்களும், ஊராட்சித் தலைவா் பதவிகளில் 13 மனுக்களும், ஊராட்சி மன்ற வாா்டுகளில் 52 மனுக்களும் என மொத்தம் 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 8089 மனுக்கள் ஏற்கப்பட்டன. தொடா்ந்து, சனிக்கிழமை மாலை வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டு மாலையில் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com