அம்மணாங்குப்பம் ஊராட்சித் தலைவா் போட்டியின்றித் தோ்வு

கே.வி.குப்பம் ஒன்றியம், அம்மணாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜி.பத்மபிரியா (43)  போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அம்மணாங்குப்பம் ஊராட்சித் தலைவா் போட்டியின்றித் தோ்வு

கே.வி.குப்பம் ஒன்றியம், அம்மணாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜி.பத்மபிரியா (43)  போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்த ஊராட்சித் தலைவா் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த ஊராட்சியைச் சோ்ந்த கணேஷின் மனைவி பத்மபிரியா உள்ளிட்ட 5 பெண்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான சனிக்கிழமை 4 போ் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனா். இதையடுத்து, பத்மபிரியா போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com