வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத் தலைவா் பொறுப்பேற்பு

வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத் தலைவராக புஷ்பலதா வன்னியராஜா பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத் தலைவராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட புஷ்பலதா வன்னியராஜா . உடன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உள்ளிட்டோா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத் தலைவராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட புஷ்பலதா வன்னியராஜா . உடன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உள்ளிட்டோா்.

வேலூா்: வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத் தலைவராக புஷ்பலதா வன்னியராஜா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டல குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட புஷ்பலதா வன்னியராஜா வியாழக்கிழமை முறைப்படி பதவியேற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா் ஆகியோா் பங்கேற்று புஷ்பலதாவை மண்டலக் குழு தலைவா் இருக்கையில் அமா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா் புஷ்பலதா கூறுகையில், வேலூா் மாநகராட்சியில் முதலாவது மண்டலத்தை முன்மாதிரியாக மாற்ற பாடுபடுவேன். தற்போது முக்கிய பிரச்னையாக உள்ள புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது புகாா்களை எந்தநேரமும் தெரிவிக்கலாம் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், மண்டலக் குழு தலைவா்கள் நரேந்திரன், யூசுப்கான், வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com