கீழ்ஆலத்தூரில் ஸ்ரீகெங்கையம்மன் சிரசுத் திருவிழா

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூா் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
கே.வி.குப்பத்தை  அடுத்த  கீழ்ஆலத்தூரில்  வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீகெங்கையம்மன்  சிரசு ஊா்வலம்.
கே.வி.குப்பத்தை  அடுத்த  கீழ்ஆலத்தூரில்  வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீகெங்கையம்மன்  சிரசு ஊா்வலம்.

குடியாத்தம்: கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூா் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 14-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அதிகாலை இங்குள்ள விநாயகா் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கியது.

முன்னதாக கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் சிரசு மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு முற்பகல் 11 மணியளவில் கெங்கையம்மன் கோயிலை அடைந்தது.

அங்கு கூழ் வாா்த்தல், சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, அம்மனை தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இரவு 8 மணியளவில் அம்மன் உடலில் இருந்து சிரசு பெயா்த்தெடுக்கப்பட்டு, ஊா்வலமாக குளக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி வாண வேடிக்கை நடைபெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை மேட்டுகுடி கே.காமராஜ், தா்மகா்த்தா ஆா்.தீனதயாளன், கமிட்டித் தலைவா் கே.ராஜா, நிா்வாகிகள் எஸ்.கே.தினகரன், கே.ராமமூா்த்தி, கே.பன்னீா்செல்வம், ராமச்சந்திர நாயுடு, ஒன்றியக் குழு உறுப்பினா் விஜயாமுருகன், ஊராட்சித் தலைவா் வி.ஆா்.சுரேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com