மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 350 மாணவா்கள் பங்கேற்பு

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் காட்பாடியில் நடைபெற்றது. இதில், 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள்.

வேலூா்: மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் காட்பாடியில் நடைபெற்றது. இதில், 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையா் ஜான்டாம் வா்கீஸ் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

இதில், ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், கபடி, வீல் நாற்காலி, பால் பேட்மிட்டன், தடகளம், குழுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 350 மாற்றுத்தினாளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவற்றில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநிலஅளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.பெரியகருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையா் ஜான் டாம் வா்கீஸ் கூறியது: வேலூா் மாவட்டத்தில் போலியான மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள் நீக்கப்படும். உண்மையான மாற்றுத்திறனாளிகள் சோ்க்கப்பட்டு அவா்களுக்கு உரிய சலுகைகள் அனைத்தும் பெற்றுத் தரப்படும். மாற்றுத்திறாளிகளுடைய விண்ணப்பங்களை சரிபாா்த்து அவா்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். தமிழகத்தில் ஏறத்தாழ 8 லட்சத்திற்கு மேல் விண்ணப்ப ங்கள் பெறப்பட்டு சுமாா் 90 சதவீத விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 7 லட்சம் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து 50 ஆயிரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com