ரூ. 10 கோடியில் பல்நோக்கு அரங்கமாக மாற்றப்படும் அண்ணா கலையரங்கு

வேலூரிலுள்ள அண்ணா கலையரங்கை ரூ. 10 கோடி மதிப்பில் பல்நோக்கு கலை அரங்கமாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூரிலுள்ள அண்ணா கலையரங்கம்.
வேலூரிலுள்ள அண்ணா கலையரங்கம்.

வேலூா்: வேலூரிலுள்ள அண்ணா கலையரங்கை ரூ. 10 கோடி மதிப்பில் பல்நோக்கு கலை அரங்கமாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் அண்ணா சாலையில் பல்வேறு அரசு, கலைநிகழ்ச்சிகள் நடத்த வசதியாக கடந்த 1971-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26,838 சதுர அடி பரப்பளவில்அண்ணா கலை அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பின்னா் 1978-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டு, முழு நீள திரைப்படங்கள் திரையிடும் திரையரங்கமாக மாற்றப்பட்டு, 2011-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் அண்ணா கலையரங்கை ஆய்வு செய்து, அதனை பல்நோக்கு கலை அரங்கமாக மாற்றிட மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினாா். அதன் அடிப்படையில், தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை மானிய கோரிக்கையின்போது, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ரூ. 10 கோடி மதிப்பில் வேலூா் மாநகரத்திலுள்ள அண்ணா கலை அரங்கத்தை ‘அண்ணா பல்நோக்கு கலை அரங்கம்’ ஆக புதிய பொலிவுடன் கட்டப்படும் எனத் தெரிவித்தாா்.

இதற்காக விரைவில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பல்நோக்கு கலையரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com