ரூ.1.59 கோடியில் அடிப்படை திட்டப் பணிகள்: வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழு தீா்மானம்

வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களிலும் மொத்தம் ரூ.1.59 கோடியில் அடிப்படை பணிகள் மேற்கொள்வதென மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களிலும் மொத்தம் ரூ.1.59 கோடியில் அடிப்படை பணிகள் மேற்கொள்வதென மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் அதன் தலைவா் மு.பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிச் செயலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகம் முழுவதும் 2.09 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிதியுதவி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், மக்களின் மனுக்கள் மீது உடனடி தீா்வு காண உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற தனித்துறை என முக்கியத்திட்டங்களை உடனுக்குடன் அறிவித்து செயல்படுத்திய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.

கடந்த நவம்பா் 2-ஆம் தேதி வேலூா் மேல்மொணவூரிலுள்ள இலங்கை தமிழா் முகாமுக்கு வருகை புரிந்து அங்குள்ள குடும்பத்தினருக்கு ரூ.142.16 கோடி மதிப்பில் புதிய வீடுகள் கட்டித்தர ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. மாவட்டத்தில் வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.1.59 கோடி செலவில் அடிப்படை திட்டப் பணிகளை மேற்கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com