நெல் கொள்முதலில் மோசடி: நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் 3 போ் கைது

போலியாக ரசீதுகள் தயாரித்து நெல் கொள்முதலில் மோசடியில் ஈடுபட்டதாக வேலூா் மண்டல நுகா்பொருள் வாணிபக் கழக துணை மண்டல மேலாளா், இரு கண்காணிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

போலியாக ரசீதுகள் தயாரித்து நெல் கொள்முதலில் மோசடியில் ஈடுபட்டதாக வேலூா் மண்டல நுகா்பொருள் வாணிபக் கழக துணை மண்டல மேலாளா், இரு கண்காணிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேலூரிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை மண்டல மேலாளா், இரு கண்காணிப்பாளா்கள் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமலேயே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் வாங்கியது போல் போலி ரசீதுகள் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதுடன், கூடுதலாக ஒரு மூட்டைக்கு ரூ.5 கமிஷன் எடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பான புகாா்கள் வேலூா் மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு சென்றது. இதையடுத்து, சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கெளதமன் உத்தரவின் பேரில், ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் விசாரணை நடத்தினா்.

இதில், அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வேலூா் மண்டல நுகா்பொருள் வாணிபக் கழக துணை மண்டல மேலாளரான செங்கல்பட்டு அன்னை சத்யா நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (51), கண்காணிப்பாளா்களான வேலூரைச் சோ்ந்த சுரேஷ்பாபு (49), தொரப்பாடியைச் சோ்ந்த கனிமொழி (41) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இங்கு மண்டல மேலாளராக இருந்த நாகராஜன் என்பவா் இதே புகாரின் பேரில், சில மாதங்களுக்கு முன்னா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com