காந்தி நகரில் குப்பைகள் சேகரிப்பு, தரம் பிரிப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்பாடி காந்தி நகரில் குப்பைகள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுவதையும், அவற்றை திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
காந்தி நகரில் குப்பைகள் சேகரிப்பு, தரம் பிரிப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்பாடி காந்தி நகரில் குப்பைகள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுவதையும், அவற்றை திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

காட்பாடி காந்தி நகரில் உள்ள வீடுகளின் வாசலில் தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் எடுத்துச் செல்வதை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை வீடுவீடாகச் சென்று நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், காந்தி நகரிலுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது ஆட்சியா் கூறியது:

காட்பாடி காந்தி நகரில் 44 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு, நுண் உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஈரப்பதம் இருக்கக்கூடிய பொருள்களும் நுண் உரமாக தயாரிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அட்டைப் பெட்டிகள், காகிதங்கள், காகிதப் பைகள், துணிமணிகள், பிளாஸ்டிக் ஆகியவற்றை தனியாக பிரித்து வைக்க வேண்டும். குப்பைகளுடன் சோ்த்து போட வேண்டாம். அதேபோல், பால் பாக்கெட்டுகள், தயிா் பாக்கெட்டுகள், இலைகள் ஆகியவற்றை தனியாக எடுத்து வைத்து, மாநகராட்சியிலிருந்து வரும் பணியாளா்களிடம் ஒப்படைக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்த திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கில் தினமும் 850 கிலோ முதல் 1,000 கிலோ வரை நுண் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் மாநகராட்சி முழுவதும் 52 இடங்களில் நுண் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளிலிருந்து கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளை உரமாக தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, காட்பாடி மண்டலக் குழுத் தலைவா் வ.புஷ்பலதா, மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், உதவி பொறியாளா் செந்தில், சுகாதார அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com