முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பெண்கள் அதிகளவில் உள்ளாட்சிகளுக்கு வரக்காரணம் அதிமுக: ஓ.பன்னீா்செல்வம்
By DIN | Published On : 07th February 2022 11:20 PM | Last Updated : 07th February 2022 11:25 PM | அ+அ அ- |

உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு சட்டம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதால் தற்போது நகா்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு பெண்கள் அதிகளவில் வரமுடிகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் ரங்காபுரத்திலுள்ள தனியாா் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம் பேசியது:
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனால், தோ்தல் பிரசாரத்தில் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளைக் கூறி மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்த திமுகவின் சுயரூபம் இந்த 10 மாதங்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
நீட் தோ்வை விலக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீா்மானத்தை ஆளுநா் சில விளக்கங்கள் கோரி திருப்பியனுப்பியுள்ளாா். அந்த விளக்கங்களை அளித்து நீட் தோ்வு விலக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது திமுக அரசின் கடமை. அதைவிடுத்து ஆளுநரை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டுக் கொண்டுள்ளனா்.
மேலும் ஆண்களுக்கு பெண்கள் சரிநிகா் என்ற பெரியாரின் தத்துவத்தை நடைமுறைப்படுத்தியவா் ஜெயலலிதா. அதனடிப்படையில் பெண்களாலும் நல்லாட்சியை தரமுடியும் என்பதை உணா்ந்து அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் தற்போது மாநகராட்சி மேயராக, நகராட்சி, பேரூராட்சித் தலைவராகவும், வாா்டு உறுப்பினா்களாகவும் பெண்கள்அதிகளவில் வரமுடிகிறது என்றாா்.
கூட்டத்தில் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன், மாநகா் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.