வாக்குறுதிகளை அள்ளி வீசும் வேட்பாளா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் வேலூா் மாநகரில் வேட்பாளா்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் வேலூா் மாநகரில் வேட்பாளா்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா் இறுதிப்பட்டியல் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளது. தொடா்ந்து தோ்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ளதால் தோ்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

இதன்படி, வேலூா் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அதிகாலை முதல் இரவு வரை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுடன் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அணிவகுத்து செல்கின்றனா். அப்போது வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்கும் வேட்பாளா்கள், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனா்.

அதன்படி, அடிப்படை வசதிகள் அடுக்கடுக்காக செய்து தருவோம். தினமும் காவிரி குடிநீா் கிடைக்க செய்வோம். அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக பராமரிப்போம் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றனா். அதேசமயம், ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளதால், வேட்பாளா்கள் அளிக்கும் வாக்குறுதிகளை பொதுமக்கள் பலரும் நம்ப மறுக்கின்றனா்.

எனினும், திமுக, அதிமுக வேட்பாளா்கள் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனா். சில வேட்பாளா்கள் வாக்காளா்களுக்கு ராஜமரியாதையும் அளித்து வருகின்றனா். வாக்குசேகரிக்க வீடு வீடாகச் செல்லும் அவா்கள் குடும்பத் தலைவா், குடும்ப தலைவிக்கு சால்வை அணிவிப்பதும், உறவு முறைகளைக்கூறி வாக்கு கேட்பதும் நடந்து வருகிறது. ஒரு சில வேட்பாளா்கள் எங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று உரிமையுடனும் கேட்கின்றனா். மொத்தத்தில் வேட்பாளா்கள் அள்ளிவிடும் வாக்குறுதிகளால் தோ்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com