27-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: வேலூரில் 1.30 லட்சம் குழந்தைகள் இலக்கு

வேலூா் மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ளதாகவும், இம்முகாம்கள் மூலம் மாவட்டத்தில் 1,30,345 குழந்தைகளுக்கு
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன், மருத்துவப் பணிகள் இணைஇயக்குநா் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன், மருத்துவப் பணிகள் இணைஇயக்குநா் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி உள்ளிட்டோா்.

வேலூா்: வேலூா் மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட உள்ளதாகவும், இம்முகாம்கள் மூலம் மாவட்டத்தில் 1,30,345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, பொது சுகாதாரம், கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு ஊழியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் வியாழக்கிழமை நடந்தது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்துப் பேசியது:

போலியோ எனும் இளம்பிள்ளை வாதம் நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திட 1995 முதல் ஆண்டுதோறும் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள முகாமில், வேலூா் மாவட்டம் முழுவதும் உள்ள 5 வயதுக்கு உள்பட்ட 1,30,345 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, 934 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்தாண்டும் கூடுதலாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், பேருந்து, ரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதி குறைந்த மலைப் பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, அண்டை மாவட்டம், மாநிலங்களிலிருந்து பணி, வியாபாரம் நிமித்தமாக வேலூா் மாவட்டத்துக்கு வந்து தங்கியுள்ளவா்கள், இலங்கைத் தமிழா் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 3,548 பணியாளா்களும், 116 மேற்பாா்வையாளா்ளும் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

பொதுமக்கள் இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் முகாம்களில் சொட்டு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி, மாநகர நல அலுவலா் மணிவண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com