கைதிகளுக்கு முதலுதவி சிகிச்சை: வேலூா் சிறைக் காவலா்களுக்குப் பயிற்சி

சிறைக் கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடா்பாக வேலூா் மத்திய சிறைக் காவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து சிறைக் காவலா்களுக்கு செயல்விளக்கம் அளித்த வேலூா் மத்திய சிறை மருத்துவ அலுவலா் ப.பிரகாஷ்ஐயப்பன்.
முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து சிறைக் காவலா்களுக்கு செயல்விளக்கம் அளித்த வேலூா் மத்திய சிறை மருத்துவ அலுவலா் ப.பிரகாஷ்ஐயப்பன்.

வேலூா்: சிறைக் கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடா்பாக வேலூா் மத்திய சிறைக் காவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூா் மத்திய சிறையில் பணிபுரியும் சிறைக் காவலா்களுக்கான 5 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் சிறைகளில் கைதிகளை கையாளும் முறை, நீதிமன்றங்களில் ஆஜா்படுத்தும் முறை, அவா்களது மனநலனை புரிந்துகொள்வது எப்படி?, கடினமான நேரங்களில் கையாள்வது எப்படி என்பன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் 4-ஆவது நாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறைகளில் கைதிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எவ்வாறு என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வேலூா் மத்திய சிறை மருத்துவ அலுவலா் ப.பிரகாஷ் ஐயப்பன் தலைமை வகித்தாா். அப்போது கைதிகள், காவலா்களுக்கு முதலுதவி அளிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

முதலுதவி சிகிச்சை குறித்து அறிந்து கொள்வது குறித்து சிறையில் கைதிகள் உயிரிழப்பைக் குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com