கோட்டை அரசு அருங்காட்சியகம் 3 நாள் மூடல்

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு உத்தரவுப்படி வேலூா் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு உத்தரவுப்படி வேலூா் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பரவலை தடுக்க வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வேலூருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக் களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் கோட்டையில் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்படவில்லை. தவிர, வெள்ளிக் கிழமை வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. எனினும், கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகமும் மூடப்பட்டது. அரசு உத்தரவுப்படி 3 நாள்கள் அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வழக்கம்போல அருங்காட்சியகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com