பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 14th January 2022 08:48 AM | Last Updated : 14th January 2022 08:48 AM | அ+அ அ- |

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் கபசுர குடிநீா் விநியோகத்தைத் தொடக்கிவைத்தாா். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவா் சி.சதீஷ்குமாா் வரவேற்றாா்.
திமுக நகர பொறுப்பாளா் எஸ்.சௌந்தர்ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்விபாபு, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ஜி.எஸ்.அரசு, தாட்டிமானப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.சக்திதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அத்தி இயற்கை மருத்துவமனை மருத்துவா் பால் பொ்டின் மற்றும் செவிலியா்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...