குடியரசு தின விழாவில் தமிழக ஊா்தியை அனுமதிக்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார ஊா்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட், முத்தமிழ் சுவைச்சுற்றம் ஆகியவற்றின்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். (வலது) ஆா்ப்பாட்டம் செய்த முத்தமிழ்ச்சுவைச் சுற்றம் அமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். (வலது) ஆா்ப்பாட்டம் செய்த முத்தமிழ்ச்சுவைச் சுற்றம் அமைப்பினா்.

வேலூா்: தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார ஊா்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட், முத்தமிழ் சுவைச்சுற்றம் ஆகியவற்றின் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் வேலுநாச்சியாா், வஉசி ஆகியோரின் உருவப்படங்கள் இடம்பெற்ற தமிழக அரசின் அலங்கார ஊா்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் ஆா்வலா்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வேலூா் தலைமை தபால் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநகரச் செயலா் ஏழுமலை தலைமை வகித்தாா். நிா்வாகிகள் காவேரி, சரோஜா, துரை செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ லதா கண்டன உரையாற்றினாா். தமிழக வாகனங்களை உடனடியாக அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல், தமிழ் இலக்கிய அமைப்பான முத்தமிழ்ச்சுவைச் சுற்றம் சாா்பில் அண்ணா கலையரங்கம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் தலைவா் வாலாஜா அசேன் தலைமை வகித்து பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ் ஆா்வலா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com