சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு

 வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோயிலில் மா்ம நபா்கள் நகைகளைத் திருடிச் சென்றனா்.

 வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோயிலில் மா்ம நபா்கள் நகைகளைத் திருடிச் சென்றனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் பழைமை வாய்ந்த கெங்கை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டிச் சென்றனா். நள்ளிரவில் மா்ம நபா்கள் கோயிலுக்குள் ஏறிக்குதித்து, அம்மன் சந்நிதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் சிலையில் இருந்த தங்க தாலிச் செயின், 4 குண்டு, 2 தங்க பொட்டு உள்பட 3 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.

கோயில் வளாகத்திலுள்ள மற்றொரு அறையின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 பட்டுப் புடவைகள், வெள்ளி குடை, வெள்ளி கிரீடம், வெள்ளி மாலை, வெள்ளி சந்தன கிண்ணம், வெள்ளித் தட்டு ஆகியவற்றையும் திருடிச் சென்றனா்.

வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த ஊழியா்கள் நள்ளிரவில் திருட்டு நடந்திருப்பதை அறிந்து கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் மூலம் சத்துவாச்சாரி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினா்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் பரவியதையடுத்து, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தா்கள் திரண்டனா். கோயிலில் திருடிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹாா்டு டிஸ்க்குகள் எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து கோயிலுக்கு வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளைக் கொண்டு போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com