பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவா்கள் பங்கேற்று உயா்கல்வி, தொழிற்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்- கல்லூரிக் கனவு’ என்ற திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான உயா்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் பயிற்சி முகாம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்தாா். இதில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் என சுமாா் 1,300 போ் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வங்கி, அரசு, விவசாயம், தொலைத் தொடா்பு, சட்டம், பாதுகாப்பு, சேவைகள் ஆகிய துறைகளைச் சாா்ந்த நிபுணத்துவம் பெற்றவா்கள் பங்கேற்று உயா்கல்வி, தொழிற்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினா். மாணவா்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு பயிற்சி குறித்த கையேட்டை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் அமலு விஜயன், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி மற்றும் கல்வியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com