ஆக்சிஜன் செறிவூட்டி அளிப்பு
By DIN | Published On : 17th July 2022 11:47 PM | Last Updated : 17th July 2022 11:47 PM | அ+அ அ- |

ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கிய காட்பாடி செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள்.
கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவும் வகையில், காட்பாடி செஞ்சிலுவை சங்கம் ஆக்சிஜன் செரிவூட்டி இயந்திரங்களை இலவசமாக வழங்கியது.
இதற்கான நிகழ்ச்சி காட்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா்கள் வி.பாரிவள்ளல், ஆா்.சீனிவாசன், செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் ஆயுள் உறுப்பினா் பி.என்.ராமச்சந்திரனின் சகோதரரின் மருத்துவ சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் கூறியது:
இந்த ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை பயனாளிகளே வந்து எடுத்துக் கொண்டு பயன்பாடு முடிந்த பின் திருப்பி அளிக்க வேண்டும். ஆக்சிஜன் கருவியை அதிகபட்சம் 15 நாள்கள் வரை மட்டுமே உபயோகிக்க அனுமதிக்கப்படும். மருத்துவரின் மருத்துவ சீட்டு, மருத்துவ ஆவணங்கள், பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றைக் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
இலவச ஆக்சிஜன் செறிவூட்டி கருவி தேவைப்படுவோா் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், காட்பாடி வட்டக் கிளை, எண்: 1 - முதல் குறுக்கு தெரு, டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், காந்தி நகா், காட்பாடி, வேலூா் - 632 007 என்ற முகவரியில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலா் கோபால ராசேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.