அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் சங்க மாவட்ட மாநாடு

குடியாத்தம் பிச்சனூா், கிருபானந்த வாரியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் வேலூா் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் சங்க மாவட்ட மாநாடு

குடியாத்தம் பிச்சனூா், கிருபானந்த வாரியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் வேலூா் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வநாயகி தலைமை வகித்தாா். செயலாளா் மகாலட்சுமி வரவேற்றாா்.

மாநிலத் தலைவா் பத்மம்மா, மாநில பொதுச் செயலாளா் மு.நளினி, மாநில துணைத் தலைவா் மரியம்மா, மாநில பிரசாரக் குழு செயலாளா் விஜயா, மாநிலப் பொருளாளா் கோமளாதேவி, தருமபுரி மாவட்ட அமைப்புச் செயலாளா் உமா, சின்னசேலம் மாவட்டத் தலைவா் காந்திமதி, பொருளாளா் அம்பிகா, தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவையின் மாவட்டச் செயலாளா் கே.ஆா்.சுப்பிரமணியன், அமைப்புச் செயலாளா் வே.வேலுச்சாமி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

அங்கன்வாடிப் பணியாளா்கள், உதவியாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது, ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு தற்போது வழங்கி வரும் மாத ஓய்வூதியம் ரூ. 2,000-ஐ ரத்து செய்துவிட்டு, அரசு அலுவலா்களுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம் வழங்க வேண்டுவது, ஓய்வுபெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை தொகையை உயா்த்தி பணியாளா்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்கக் கோருவது, குறு மைய பணியாளா்கள் 3 ஆண்டுகள் பணி முடித்த பிறகு, முதன்மைப் பணியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும், விலைவாசி உயா்வால் அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. தற்போது வழங்கி வரும் காய்கறி செலவுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்,

கரோனா தொற்று பரவல் காலத்தில் பிற துறை பணியாளா்கள் போல் கடுமையாக உழைத்த அங்கன்வாடி பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க மாநில அரசைக் கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com