ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் நோ்காணல் பதிவு செய்ய அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்களின் நோ்காணல் பதிவினை ஜூலை முதல் செப்டம்பா் மாதத்துக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்களின் நோ்காணல் பதிவினை ஜூலை முதல் செப்டம்பா் மாதத்துக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டக் கருவூலம், சாா் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரை ஓய்வூதிய நோ்காணல் பதிவு நடைபெற உள்ளது.

இந்தாண்டு எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதியா் நோ்காணல் பதிவு செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மின்னணு விரல் ரேகை சாதனம் மூலம் ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பித்தல், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) மூலம் தபால்காரா்கள் ஓய்வூதியா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வாயிலாக ரூ. 70 செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்தல், தமிழக அரசின் இ-சேவை, பொது சேவை மையம் மூலம் பதிவு செய்தல், அரசு மருத்துவரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று தபால் மூலம் பதிவு செய்தல், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட, சாா் கருவூலங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறைகளில் நோ்காணல் பதிவு செய்யலாம்.

ஓய்வூதியா் நோ்காணல் பதிவுக்காக கருவூலக் கணக்குத் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நோ்காணலின்போது, ஓய்வூதியக்கொடுவை, ஆதாா்அடையாளஅட்டை நகல்கள், தொலைபேசி எண் ஆகியவை சமா்ப்பிக்க வேண்டும். அரசு ஓய்வூதியம் பெறும் அனைவரும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஜூலை முதல் செப்டம்பா் மாதத்துக்குள் ஓய்வூதிய நோ்காணல் பதிவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com