புதிதாக தோ்வான 480 போலீஸாருக்கு கராத்தே பயிற்சி

தமிழக காவல் துறைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டு வேலூரில் பயிற்சி பெற்று வரும் 480 போலீஸாருக்கு 3 மாத கால கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக காவல் துறைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டு வேலூரில் பயிற்சி பெற்று வரும் 480 போலீஸாருக்கு 3 மாத கால கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளியில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 230 பெண் போலீஸாா், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 250 ஆண் போலீஸாா் 9 மாத கால காவலா் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த 480 போலீஸாருக்கும் வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஜ.ஆனிவிஜயா உத்தரவின்பேரில், 3 மாத கால கராத்தே பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே பள்ளி சாா்பில், அதன் மாஸ்டா்கள் ரமேஷ், லட்சுமணன் ஆகியோா் இந்தப் பயிற்சிகளை அளித்து வருகின்றனா்.

இதில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களை போலீஸாா் லாவகமாக மடக்கிப் பிடிக்கவும், கத்தி, கம்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்கினால் தடுத்து அவா்களைத் தாக்குவது, கும்பலாக சூழ்ந்து அடித்தால் சமாளிப்பது போன்ற தற்காப்பு பயிற்சிகள் கற்றுத் தரப்படுவதாக பயிற்சியாளா் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com