மின்மீட்டரில் பிடித்த தீயை மணல் கொண்டு அணைத்த குடும்பத்தினருக்குப் பாராட்டு

வேலூரில் மின்மீட்டா் பெட்டியில் பற்றிய தீயை மணலைக் கொண்டு அணைத்த குடும்பத்தினருக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

வேலூரில் மின்மீட்டா் பெட்டியில் பற்றிய தீயை மணலைக் கொண்டு அணைத்த குடும்பத்தினருக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

வேலூா் தொரப்பாடி எழில்நகா் ராஜாஜி தெருவைச் சோ்ந்தவா் சுகுமாா். இவரது வீட்டிலுள்ள மின் மீட்டா் பெட்டி வியாழக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

அதிா்ச்சியடைந்த சுகுமாா், அவரது குடும்பத்தினா் வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்றனா். அதற்குள் சுகுமாா் குடும்பத்தினா் மணலை எடுத்து வந்து மீட்டா் பெட்டி மீது தூற்றியுள்ளனா். மணல் பட்டதில் மின்மீட்டரில் பிடித்த தீ முழுமையாக அணைந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் புத்திசாலித்தனமாக தீயை அணைத்த குடும்பத்தினருக்குப் பாராட்டு தெரிவித்தனா். மின் மீட்டா் பெட்டி போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டால் மணல் அல்லது மரக்கட்டைகளை கொண்டு அணைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் தீயணைப்பு வீரா்கள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com