கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th June 2022 03:03 AM | Last Updated : 24th June 2022 03:03 AM | அ+அ அ- |

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.
குடியாத்தம், போ்ணாம்பட்டு நகர, ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் பி.காத்தவராயன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் சி.சரவணன் தொடக்கி வைத்தாா்.
இதில், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.சாமிநாதன், கே.ஜே.சீனிவாசன், எஸ்.ஏகலைவன், பி.குணசேகரன், வி.குபேந்திரன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
படித்த இளைஞா்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.