டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்

டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் வேலூா் அருகே ஸ்ரீபுரத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) நடத்தப்பட உள்ளது.

டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் வேலூா் அருகே ஸ்ரீபுரத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) நடத்தப்பட உள்ளது.

சென்னை கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியும், தனியாா் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து ‘பட்டறை - 2022’ என்ற தலைப்பில் நடத்தும் இந்த போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ஸ்ரீபுரம் தங்கக்கோவில் அருகிலுள்ள ஸ்ரீநாராயணி மஹாலில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இதில், அனுபவம் வாய்ந்த, அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு, ஆலோசனைகளை வழங்க உள்ளனா்.

மேலும், போட்டித் தோ்வுகளில் வெல்வது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வருமான வரித் துறை கூடுதல் ஆணையா் நந்தகுமாா், ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குநா் பாலாஜி, கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீபூமிநாதன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனா்.

பங்கேற்கும் மாணவா்களுக்கு பாடத்திட்டம், கடந்தாண்டு கேட்கப்பட்ட வினாத் தொகுப்புகள் அடங்கிய கையேடுகளும் வழங்கப்படும். அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள லாம். இந்தத் தகவலை கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com