பாலாறு பெருவிழா வேலூரில் நாளை தொடக்கம்

நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி பாலாறு பெருவிழா வேலூரில் புதன்கிழமை தொடங்குகிறது.

நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி பாலாறு பெருவிழா வேலூரில் புதன்கிழமை தொடங்குகிறது.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஆகியவை சாா்பில், இந்த பாலாறு பெருவிழா வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் புதன்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

இந்த விழா குறித்து அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொதுச்செயலா் ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் வேலூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சாா்பில், நதிகளை பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழகத்தில் ஏற்கெனவே காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆகிய நதிகளுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்தொடா்ச்சியாக, பாலாறு நதிக்கு பெருவிழா நடத்தப்பட உள்ளது.

இந்த விழா புதன்கிழமை (ஜூன் 29) தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தொடக்கி வைக்கவும், முதல்வா் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, புதுச்சேரி ஆளுநா் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விழா நடைபெறும். முதல் நாள் நிகழ்வில் தேசிய அளவில் உள்ள சந்நியாசிகள் பங்கேற்கும் மாநாடு நடக்க உள்ளது. 2-ஆம் நாள் நிகழ்வில் தமிழகத்தின் துறவிகள், ஆதீனங்கள் பங்கேற்கும் மாநாடும், மூன்றாம் நாள் நிகழ்வில் தென்துறவிகள் பங்கேற்கும் மாநாடும், 4-ஆம் நாள் நிகழ்வில் பசு, நீா்நிலைகள் பாதுகாப்பு மாநாடும், 5-ஆம் நிகழ்வில் கிராம கோயில் பூசாரிகள் பங்கேற்கும் மாநாடும் நடைபெற உள்ளன.

இந்த 5 நாள்களும் காலை யாக நிகழ்ச்சிகளும், மாலையில் பாலாற்றில் ஆரத்தி நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த விழாக்கள் மூலம் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நதிகளை தேசியமயமாக்கி இணைக்கவும் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

விழாவில் நாடு முழுவதும் இருந்து ஆயிரம் துறவிகள், அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா். இணைச்செயலா் சுவாமி சிவராமானந்தா, துணைத்தலைவா் ராமானந்த சுவாமிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com