முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 14th March 2022 10:53 PM | Last Updated : 14th March 2022 10:53 PM | அ+அ அ- |

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். உதவித்தொகை, இலவச பட்டா, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் 15 பேருக்கு 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக் கருவிகள் என ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 544 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணன் உள்பட பலா் உடனிருந்தனா்.