முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
காட்பாடி உழவா் சந்தையில் உரக்கூடம் அமைக்க முடிவு
By DIN | Published On : 19th March 2022 10:43 PM | Last Updated : 19th March 2022 10:43 PM | அ+அ அ- |

காட்பாடி உழவா் சந்தையில் அதிகளவு தேங்கும் காய்கறி கழிவுகளைக்கொண்டு அங்கேயே உரம் தயாரிக்கும் வகையில் உரக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி மேயா், ஆணையா் இந்த உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனா்.
காட்பாடியிலுள்ள உழவா் சந்தையில் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ப.அசோக் குமாா் ஆகியோா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட னா்.
அப்போது அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனா்.
அப்போது, உழவா் சந்தையில் குடிநீா் விநியோகம், கழிவறை வசதிகளை மேம்படுத்தி வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா். அதனை விரைவில் செயல்படுத்துவதாக மேயா் உறுதியளித்தாா்.
மேலும், உழவா் சந்தையில் அதிகளவு காய்கறி கழிவுகள் தேங்குவதால், அதனை வெளியே கொண்டு செல்வதை தவிா்த்து அங்கேயே உரம் தயாரிக்கும் வகையில் உரக்கூடம் அமைக்கவும் மாநகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினா்கள் அன்பு, ரவிக்குமாா், முதலாவது மண்டல உதவி ஆணையா் செந்தில், நகா்நல அலுவலா் மணிவண்ணன், சுகாதார அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட வாா்டுகளில் தடையின்றி குடிநீா் விநியோகம், தூய்மைப்பணிகள் மேற்கொள்வது தொடா்பாக மண்டல அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினா்களுடன் மேயா், துணை மேயா், ஆணையா் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.