முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
போட்டித் தோ்வுக்கான பயிற்சி: காட்பாடி, அரியூரில் தகவல் தொழில்நுட்ப மையம்
By DIN | Published On : 19th March 2022 10:43 PM | Last Updated : 19th March 2022 10:43 PM | அ+அ அ- |

போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி, அரியூரில் ரூ.4.54 கோடியில் தகவல் தொழில்நுட்ப மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு நகா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ் புதை சாக்கடை திட்டம், சாலைகள், நவீன மின்விளக்குகள், கண்காணிப்புக் கேமராக்கள், கோட்டை அகழியை தூா்வாரி அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்தொடா்ச்சியாக, பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காந்திநகரிலும், அரியூா் பகுதியிலும் மொத்தம் ரூ.4.54 கோடியில் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளக்கூடிய வகையில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: வேலூா் மாநகரிலுள்ள இளைஞா்கள் மத்திய, மாநில அரசு கள் நடத்தும் போட்டித்தோ்வுகள், வங்கிப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு தயாராகும் பொருட்டு பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் வேலூரில் இரு இடங்களில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளன. இதற்காக காட்பாடி காந்திநகரிலும், அரியூா் பகுதியிலும் இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
காட்பாடியில் ரூ.2.04 கோடியிலும், அரியூரில் ரூ.2.50 கோடியிலும் இவை அமைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம், படித்த இளைஞா்களுக்கு போட்டித்தோ்வுகள் சாா்ந்த அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன என்றனா்.