வேலூா் மாவட்டத்தில் விடுபட்ட500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

வேலூா் மாவட்டத்தில் விடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் விடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பு முடிந்த பெண்களின் திருமணத்துக்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி, ஒரு பவுன் தங்கக் காசு, பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி, ஒரு பவுன் தங்கக் காசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டத்திலுள்ள 2,409 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி அளிக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

அப்போது, சுமாா் 700 பயனாகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் மற்ற பயனாளிகளுக்கு தங்கக் காசு, நிதியுதவி வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

தற்போது தோ்தல் முடிந்ததையடுத்து, விடுபட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி அளிக்கும் பணி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் முருகேஸ்வரி தலைமை வகித்து, 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவியை வழங்கினாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டு இதுவரை தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறாத பயனாளிகள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com