இந்து கடவுள் குறித்து அவதூறு: வேலூா் ஆட்சியரிடம் புகாா்

இந்து கடவுள் குறித்து அவதூறு விடியோ காட்சியை வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து முன்னணியினா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அவதூறு விடியோ வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்த இந்து முன்னணியினா்.
அவதூறு விடியோ வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்த இந்து முன்னணியினா்.

இந்து கடவுள் குறித்து அவதூறு விடியோ காட்சியை வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து முன்னணியினா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி கோட்டத் தலைவா் கோ.மகேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் உடுக்கை, பம்பை அடித்தபடி, சிவன் வேடமணிந்தவருடன் ஆட்சியா் அலுவலகம் வந்து அளித்த மனு:

கடந்த 2 நாள்களுக்கு முன் மைனா் விஜய் என்பவா் யூடியூப் சானலில் நடராஜ பெருமான் குறித்து அவதூறாக விடியோ வெளியிட்டிருந்தாா். இது இறை நம்பிக்கை, இறை வழிபாட்டை அவதூறு செய்வதாக உள்ளது. விடியோ வெளியிட்டவா், அதற்கு உடந்தையாக இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோ்க்காடு அருகே அண்ணா நகா் பகுதி மக்கள் அளித்த மனு:

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் 16 குடும்பங்களைச் சோ்ந்த நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடி வருகிறோம். எனவே, எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

குடியாத்தம் அருகே உள்ள பூசாரிவலசை ஒண்டியூா் கிராம மக்கள் அளித்த மனு:

ஒண்டியூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாம். எங்கள் பகுதியில் குடிநீா் தொட்டி அமைக்கப்படாததால் குடிநீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதேபோல, வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி அரசுத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் நரிக்குறவா்களுக்கு நலவாரிய உறுப்பினா் அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com