முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 08th May 2022 05:03 AM | Last Updated : 08th May 2022 05:03 AM | அ+அ அ- |

விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய ரிசா்வ் வங்கி ஆலோசனைக் குழு உறுப்பினா் டி.என்.மனோகரன். உடன் கல்லூரி நிா்வாகிகள்.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை-அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ரிசா்வ் வங்கி ஆலோசனைக் குழு உறுப்பினரும், தேசிய வங்கி நிதி மூலதனம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் சுயாதீன இயக்குநருமான டி.என்.மனோகரன் பங்கேற்று 990 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.
பட்டம் பெற்றவா்களில் திருவள்ளுவா் பல்கலைக் கழக தரவரிசையில் முதலிடம் பிடித்த இளநிலை நுண்ணுயிரியல் துறை மாணவி ஜெ.கவிதா, முதுநிலை வணிக கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவா் எம்.ராஜ்குமாா், முதுநிலை தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி எம்.ஸ்ருதி ஆகியோரும் அடங்குவா்.
கல்லூரி மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா்.
கல்லூரி முதல்வா் மு.வளா்மதி வரவேற்றாா். வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் டி.என்.ராஜேந்திரன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மேலாளா் வினோத், கல்லூரி துணை முதல்வா் மு.மேகராஜன், கல்லூரி ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.