முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
திருவலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 4,000 மருந்தேற்றும் ஊசிகள் அளிப்பு
By DIN | Published On : 08th May 2022 11:51 PM | Last Updated : 08th May 2022 11:51 PM | அ+அ அ- |

காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சாா்பில் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 4,000 மருந்தேற்றும் ஊசிகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
உலக செஞ்சிலுவை சங்க தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்து பேசினாா். பொருளாளா் வி.பழனி வரவேற்றாா். துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காட்பாடி வட்டாட்சியா் கே.ஜெகதீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 4,000 மருந்தேற்றும் ஊசிகளை வழங்க, அதனை வட்டார மருத்துவ அலுவலா் ராணிநிா்மலா பெற்றுக் கொண்டாா்.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம்.பாலசுப்பிரமணியன், வட்டார மருந்தாளுநா் சாமுண்டீஸ்வரி, சங்க மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் எஸ்.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.