நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அவகாசம் தேவை: ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு

நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அவகாசம் வழங்கவும், அதற்குள் மாவட்ட நிா்வாகம் மாற்றிடம் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையிட்டனா்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்ற வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்ற வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.

நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அவகாசம் வழங்கவும், அதற்குள் மாவட்ட நிா்வாகம் மாற்றிடம் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையிட்டனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு முத்தரையா் சங்கம் சாா்பில், அதன் மாவட்ட தலைவா் ஏகாம்பரம், செயலா் கல்யாணசுந்தரம், பொருளாளா் மாணிக்கம் ஆகியோா் அளித்த மனு:

தமிழகம் முழுவதும் 29 பெயா்களில் வாழ்ந்து வரும் முத்தரையா் சமூகத்தினா் அனைவருக்கும் ஒரே ஜாதி சான்று வழங்கி சலுகை வழங்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலூரில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலை அமைத்து பெருமை சோ்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் அளித்த மனு:

வேலூா் மாவட்டத்தில் லாரிகளில் மணல் எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளனா். ஆனால், மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாட்டு வண்டித் தொழிலாளா்கள் நலன் கருதி மணல் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனு:

ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் அளித்திட வேண்டும். அதற்குள் மாற்று இடமும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் மனு அளித்தனா். இந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, ஆட்சியரிடம் முன்னாள் ராணுவ வீரா் ஒருவா் மது போதையில் மனு அளிக்க வந்திருந்தாா். அவா், ஆட்சியா் அருகே சென்று மனுவை அளிக்காமல் தள்ளாடியபடி நின்றதுடன், ஆட்சியரின் கேள்விக்கு அலட்சியமாகவும் பதிலளித்தாா். அதிகாரிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து முன்னாள் ராணுவ வீரரை கூட்டரங்கிலிருந்து வெளியேற்றினா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com