முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
10-ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்
By DIN | Published On : 11th May 2022 12:02 AM | Last Updated : 11th May 2022 12:02 AM | அ+அ அ- |

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலைக் கைதி முருகன் 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவரது உடல் நிலையை சிறை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா், தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி, கடந்த 1-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளாா். தண்ணீா்கூட அருந்தாமல் அவா் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முருகனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் 10-ஆவது நாளாக செவ்வாய்க் கிழமையும் தொடா்ந்து நடைபெற்றுள்ளது. சிறை அதிகாரிகள் முயற்சி செய்தும் அவா் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, 10 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முருகனின் உடல்நிலையை சிறை மருத்துவா்கள் அவரது உடல் நிலையை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.