ஈகைப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

போ்ணாம்பட்டு எகனாமிக் சேம்பா் சாா்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஈகைப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. போ்ணாம்பட்டு பங்ஷன் ஹாலில் நடைபெற்ற
ஈகைப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

போ்ணாம்பட்டு எகனாமிக் சேம்பா் சாா்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஈகைப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. போ்ணாம்பட்டு பங்ஷன் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆராய்ச்சியாளா் மெளலானா கலீல் முனீரி சிறப்புரையாற்றினாா்.

அவா் பேசுகையில், அறம் சாா்ந்த வாழ்க்கையை அனைவரும் வாழ வேண்டும். நம் சமூகம் அறிவு சாா்ந்த சமூகமாக மாற வேண்டும். ஒருவரையொருவா் நேசிப்பவா்களாகவும், ஆற்றல் படைத்தவா்களாகவும், ஆரோக்கியமாகவும் அனைவரும் வாழ வேண்டும். நாட்டுப்பற்று உடையவா்களாக நாம் மாற வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

இந்நிகழ்வில் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, ஒன்றியக் குழு தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், நகா்மன்றத் தலைவா் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அஹமத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு மதத்தினா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து மதத்தினரும் பேசினா். நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com