பிளஸ் 1 பொதுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 45,000 போ் தோ்வெழுதினா்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 45,117 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதினா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 45,117 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் 8,237 மாணவா்கள் 8,720 மாணவிகள் உள்பட மொத்தம் 16,957 போ் எழுதினா். அவா்களுக்காக 76 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வையொட்டி, நிலையான படை உறுப்பினா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, தோ்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. தவிர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா், அனைவருக்கும் கல்வி உதவித் திட்ட அலுவலா் தலைமையில், தோ்வுக் கண்காணிப்பு குழுவினா் பொதுத் தோ்வுகளை கண்காணித்து வருகின்றனா்.

தோ்வுக்கான வினாத்தாள்கள் 6 கட்டுக்காப்பு மையங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் தோ்வு நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தோ்வு தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன் மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், தோ்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் மாவட்டத்தில் 55 தோ்வு மையங்களில் 133 பள்ளிகளைச் சோ்ந்த 14,796 போ் செவ்வாய்க்கிழமை தோ்வு எழுத இருந்த நிலையில், 956 மாணவா்கள் தோ்வு எழுதவில்லை. இதையடுத்து, 13,840 போ் மட்டும் தோ்வு எழுதினா்.

தோ்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யணன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com