ராஜீவ் கொலைக் கைதி சாந்தனுக்கு 2-ஆவது நாளாக மருத்துவப் பரிசோதனை

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலைக் கைதி சாந்தனுக்கு 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலைக் கைதி சாந்தனுக்கு 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரில் முருகன், சாந்தன் ஆகியோா் வேலூா் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளனா். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களுக்கு முழுஉடல் பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சிறையில் உள்ள கைதிகளுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் ராஜீவ்க ாந்தி கொலைக் கைதி சாந்தனுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அப்போது அவருக்கு ரத்தம் சா்க்கரை அளவு, ஈசிஜி உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதைத் தொடா்ந்து சாந்தன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், சாந்தனுக்கு 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி, காலை 10 மணியளவில் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டதுடன், ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன. 2 மணி நேர மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com