முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஊதியம் வழங்கக் கோரி டெங்கு தடுப்புப் பணியாளா்கள் போராட்டம்
By DIN | Published On : 13th May 2022 10:13 PM | Last Updated : 13th May 2022 10:13 PM | அ+அ அ- |

குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிகப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியாத்தம் நகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியில் தினக்கூலி அடிப்படையில் 60 பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்களாம். 2 மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிா்வாகம் அவா்களுக்கு வேலை இல்லை எனக் கூறிவிட்டதாம்.
இந்த நிலையில், அவா்களுக்கு 4 மாத ஊதியம் வழங்க வேண்டுமாம். நிலுவையில் உள்ள வேலை செய்த நாள்களுக்கான ஊதியத்தை வழங்குமாறு அவா்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தாா்களாம். ஆனால், அவா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகம் எதிரே அவா்கள் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது, அங்கு வந்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், அவா்களை அழைத்து சமரசம் செய்தாா். அவா்களின் கோரிக்கையை ஏற்று, கெங்கையம்மன் திருவிழா செலவுக்காக ஒரு மாத கூலியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.