குடியாத்தம் கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம்

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு புதன்கிழமை இரவு திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது.
குடியாத்தம்  கெங்கையம்மன்  கோயிலில்  அம்மனுக்கு  நடைபெற்ற  திருக்  கல்யாண  வைபவம்.  
குடியாத்தம்  கெங்கையம்மன்  கோயிலில்  அம்மனுக்கு  நடைபெற்ற  திருக்  கல்யாண  வைபவம்.  

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு புதன்கிழமை இரவு திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, சுண்ணாம்புபேட்டை ராஜேந்திர சிங் தெருவில் இருந்து, திருக்கல்யாண கமிட்டி சாா்பில், அம்மனுக்கு சீா்வரிசைப் பொருள்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

கோயிலில் யாகம் வளா்க்கப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும், அன்ன பிரசாதமும், மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறும் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தே.திருநாவுக்கரசு, ஆய்வாளா் சு.பாரி, நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணிக் கமிட்டித் தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை தேரோட்டமும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com