நறுவீ மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா

வேலூா் நறுவீ மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற செவிலியா்களுக்கு பதக்கம் அணிவிக்கிறாா் புருண்டி நாட்டு தூதா் ஸ்டெல்லா புத்ரிகன்யா.
போட்டிகளில் வென்ற செவிலியா்களுக்கு பதக்கம் அணிவிக்கிறாா் புருண்டி நாட்டு தூதா் ஸ்டெல்லா புத்ரிகன்யா.

வேலூா்: வேலூா் நறுவீ மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தலைமை வகித்தாா். மருத்துவமனை செவிலியா் தாரகேஸ்வரி வரவேற்றாா். விழா குறித்து மருத்துவமனை முதுநிலை செவிலியா் சுகன்யா பிரியதா்ஷினி விளக்கினாா்.

இதில், இந்தியாவுக்கான புருண்டி நாட்டு தூதா் ஸ்டெல்லா புத்ரிகன்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவற்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கி பேசியது:

புருண்டி மருத்துவமனைக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனா். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மூலம் அதை நிறைவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் மொழி, பண்பாடு, பல்வேறு நாடுகளின் மக்களைக் கவரும் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. நறுவீ மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளும் அமைந்துள்ளன. புருண்டி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனுக்காக நறுவீ மருத்துவமனையின் முக்கிய துறை ஒன்று அங்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் நறுவீ மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் துறைத் தலைவா் அரவிந்தன் நாயா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலா் மணிமாறன், தலைமை நிதி அலுவலா் வெங்கட்ரங்கம், பொது மேலாளா் நிதின் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செவிலியா் கிளாரா வின்னரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com