நாளை பொது விநியோகத் திட்டகுறைதீா் நாள் முகாம்

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் நாள் முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மே 14) நடைபெற உள்ளது.

வேலூா்: பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் நாள் முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மே 14) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்ட சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிறப்பாக வழங்கும் வகையில், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மே 14) சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். பொது விநியோகத் திட்ட பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் இருந்தால் அதையும் தெரிவிக்கலாம்.

எனவே, குடும்ப அட்டைதாரா்கள் தங்களது கோரிக்கைகள், ஆவணங்களின் நகலுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல்-நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், சனிக்கிழமை (மே 14) கீழ்கண்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூா் வட்டம், கந்திலி கிராம நியாய விலை அங்காடியிலும், நாட்டறம்பள்ளி வட்டம், கொத்தூா் கிராமம் நியாய விலை அங்காடியிலும், வாணியம்பாடி வட்டம், நிம்மியம்பட்டு கிராமம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்திலும், ஆம்பூா் வட்டம், சோமலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகக் கட்டடத்திலும் குறைதீா் முகாம் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com