முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ரயில்வே நடை மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 15th May 2022 04:57 AM | Last Updated : 15th May 2022 04:57 AM | அ+அ அ- |

14vndvp3_1405chn_187_1
வாணியம்பாடியில் ரயில்வே நடை மேம்பாலம் உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே நகரின் முக்கிய பகுதிகளாக நியூ டவுன் மற்றும் பேருந்து நிலையம், பஜாா் வீதிகள் அமைந்துள்ளன. இதன் அருகே நியூடவுன் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த நிலையில், ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்லாமல் இருக்க, மக்கள் பயன்பாட்டுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையம் மற்றும் நியூடவுன் இடையே தண்டவாளப் பகுதியில், ரயில்வே நிா்வாகம் சாா்பில், நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தை பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். அதேபோல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்லும் பயணிகளும் நடை மேம்பாலத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நடை மேம்பாலப் பராமரிப்புப் பணி எனத் தெரிவித்து, பேருந்து நிலைய பகுதியிலிருந்து நடை மேம்பாலத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள், முதியோா்கள், பெண்கள், சிறுவா்கள், பொது மக்கள் உள்ளிட்டோா் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து சென்று வரும் நிலை இருந்து வருகிறது.
இதுவரை ரயில்வே நிா்வாகம் சாா்பில் சீரமைப்பு செய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனா். இது தொடா்பாக சமூக நல ஆா்வலா்கள், பொது மக்கள் சாா்பில் பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த ரயில்வே நடை மேம்பாலத்தை, உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Image Caption
~நடைபாதை மேம்பாலம் இல்லாத நிலையில் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தைக் கடந்து செல்லும் பொதுமக்கள்.