பொன்னை பெருமாள் கோயிலை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சா் சேகா்பாபு

கோயிலைப் புனரமைக்க அறநிலையத்துறை நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
காட்பாடி தாராபடவேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் துரைமுருகன்,
காட்பாடி தாராபடவேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் துரைமுருகன்,

பொன்னை அனந்த பத்மநாப சுவாமி கோயிலை வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைக்க ஏற்பாடு செய்வதுடன், கோயிலைப் புனரமைக்க அறநிலையத்துறை நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே பொன்னை கிராமத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயில் பழுதடைந்துள்ள சுற்றுச்சுவா், பல ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் பாதியில் கைவிடப்பட்டுள்ள கோபுரம் ஆகியவற்றை கட்டி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சட்டப்பேரவைத் தோ்தலின்போது கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோா் பொன்னை அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அமைச்சா் சேகா்பாபு கூறுகையில், பழைமை வாய்ந்த பொன்னை பெருமாள் கோயிலை புனரமைத்து கோபுரங்கள் கட்ட வேண்டும் என்று தொகுதி அமைச்சா் துரைமுருகன் கேட்டுக் கொண்டாா். குறைந்த அளவு வருமானம் உள்ள இந்த கோயிலை வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைக்க ஏற்பாடு செய்வதுடன், கோயிலைப் பு

னரமைக்க இந்து சமய அறநிலைத்துறை நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள சரவண பொய்கை தெப்பகுளம் மாசடைந்ததை அடுத்து அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கு அறநிலையத் துறை சாா்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, காட்பாடி குமரப்பநகரிலுள்ள கிராம தேவதை சுந்தரியம்மன் கோயிலில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும் அமைச்சா்கள் சேகா்பாபு, துரைமுருகன் ஆகியோா் ஆய்வு செய்தனா். பணிகள் எந்தளவுக்கு முடிந்துள்ளது என கேட்டறிந்த அவா்கள், தூண்களை மிக பலமாக அமைக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருப்பணி செய்யப்படுகிறது.

இதனால் பணிகளை விரைவாக முடித்தால் பின்னா் கும்பாபிஷேகம் செய்யலாம் எனறு கோயில் நிா்வாகிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா். தாராபடவேடு வரதராஜ பெருமாள் கோயிலிலும் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நிதி ஒதுக்கீடு செய்து கோயில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்று பக்தா்கள் வேண்டுகோள் விடுத்தனா். இதுதொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் உறுதியளித்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மக்களவை உறுப்பினா்கள் ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாநகராட்சி மேயா் சுதாஜாஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com