தரைப்பாலம் கோரி பாலாற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டம் 

பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் பாலாற்றில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பாலாற்றில் தரைபாலம் அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்.
பாலாற்றில் தரைபாலம் அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்.

பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் பாலாற்றில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வேலூர் மாவட்டம், மேல்மொனவூர் அருகேயுள்ள பாலாற்றில் மேல்மொனவூர் - திருமணி பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கக் கோரி சுமார் 8 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரி வருகின்றனர். மேலும் தரைப்பாலம் இல்லாததால் திருமணி, லத்தேரி, அன்னங்குடி உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் வரை சுற்றி வேலூர் செல்ல வேண்டி உள்ளது. 

இந்த நிலையில் இதுகுறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் திருமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பாலாற்றில் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையிலும் இன்று பாலாற்று தண்ணீரில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனிதச் சங்கிலி மற்றும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தரைப்பாலம் அமைக்கக் கோரி கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com